தற்போது தவறாக நடத்தப்படுவதை எதிர்கொண்டு வருகின்ற மற்றவர்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காக, வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்துள்ள பெண்களின் சக்தி வாய்ந்த வாழ்க்கைக் கதைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரின் கதையும் தனித்துவமானது, இந்த தைரியமிக்க பெண்மணிகள் விருப்பத்துடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

 

மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

வாழ்க்கையை மாற்றிய கதைகள்

எங்களுடைய திட்டங்களில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே எங்கள் மிக முக்கியமான அக்கறையாகும், கவனத்தில் கொள்ளவும், கீழேயுள்ள படங்களில் அந்த வாழ்க்கைக் கதையில் தப்பிப் பிழைத்தவரைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்துப் படங்களும் எங்கள் திட்டங்களிலிருந்து தோன்றியவை, மேலும் நாங்கள் தினந்தோறும் காண்கின்ற சந்தோஷத்தைக் காட்டுகின்றன.

வெற்றிக் கதைகள் 1

எங்களுக்கு பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது, அவர் தான் மயிலாடுதுறையை சேர்ந்தவரென்றும் தன் அண்டை வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவள் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறினார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த 27 வயது பெண்ணை கவனிப்பதற்கு அவருடைய வயதான தந்தையாலும் சிறுவனாக இருக்கும் தம்பியாளும் இயலவில்லை எனக் கூறினார். அந்தப் பெண்ணுக்கு தகுந்த தங்கும் வசதி, மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை கொடுக்க வேண்டும் என வேண்டினாம். நாங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கும், ஒருங்கிணைந்த மையத்திற்கும் பாதிக்கப்பட்டவருக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்யுமாறு விண்ணப்பித்தோம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அந்தப் பெண்ணை காப்பாற்றி சீர்காழியில் இருக்கும் கார்டன் மென்டல் ஹெல்த் கேர் சென்டரில் சேர்த்தனர்.

வெற்றிக் கதைகள் 2:

ஒரு 12 வயது சிறுமியை அவரின் 60 வயதான தாய் மாமன் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி உள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பம் ஆகி விட்டா ள். அவளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். தனக்கு நடந்து கொண்டிருப்பது பாலியல் வன்கொடுமை என்று அறியாத அந்த சிறுமி அந்த 60 வயது பெரியவரை தன் கணவராகவும் அவரை தான் காதலிப்பதாகவும் எண்ணிக் கொண்டு இருக்கிறாள். இந்த தகவலை நாங்கள் வேலூரை சேர்ந்த ஒருங்கிணைந்த மையத்திற்கு தெரிவித்தோம் அந்த சிறுமியை காப்பாற்றி குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். .அந்தத் தவறைச் செய்த குற்றவாளியையும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போலீசாரிடம் ஒருங்கிணைந்த மையம் ஒப்படைத்து விட்டது.

வெற்றிக் கதைகள் 3:

தங்கள் ஊரில் ஒரு குழந்தை திருமணம் நடப்பதாக அந்த ஊரை சேர்ந்த ஒரு நபர் 181க்கு அழைத்து தகவல் அளித்தார். திருமணம் நடக்கும் அந்தப் பெண்ணுக்கு 16 வயது என்றும் அவருக்கு இன்னும் ஒரே நாளில் திருமணம் நடப்பதாகவும் தகவல் அளித்தார். நாங்கள் தர்மபுரியை சேர்ந்த ஒருங்கிணைந்த மையத்திற்கு எங்களிடம் இருந்த அனைத்து தகவல்களையும் அளித்தோம். தர்மபுரியின் ஒருங்கிணைந்த மையம், காவல்துறையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடைபெற்று விட்டதாகவும், திருமணம் நடைபெற்ற பெண்ணுக்கு 17 வயதாகி விட்டது என்றும் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் காப்பாற்றப்பட்ட இந்தப் பெண் புகார் அளிக்கப்பட்டவரின் மூத்த சகோதரி ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமியை ஒருங்கிணைந்த மையத்தின் உதவியுடன் குழந்தைநல குழுவிடம் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வெற்றிக் கதைகள் 4

அழைப்பாளர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு லாரி டிரைவர் ஆல் கடத்தப்பட்டதாகவும் தற்போது மாதவரத்தில் இருப்பதாகவும் தகவல் அளித்தார். நாங்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தும் மாதவரத்தில் உள்ள துணை ஆணையருக்கும் தகவல் தெரிவித்தோம். மாதவரத்தில் உள்ள துணை ஆணையர் உதவியுடன் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றி அவருக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளார்.

வெற்றிக் கதைகள் 5

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தங்குவதற்கு இடமின்றி தர்காவில் தங்கிக்கொண்டு இருப்பதாக 181 க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கும், ஒருங்கிணைந்த மையத்திற்கும் பாதிக்கப்பட்டவருக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்யுமாறு விண்ணப்பித்தோம். இறுதியில் புகாரை தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த புது ஆய்வாளரிடமும் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளரிடம் அளித்து அந்தப் பெண்ணுக்கு தகுந்த தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டினோம்.

பொறுப்புத் துறப்பு:

இந்த கதைகளில் வெளிப்படுத்தப்படுகின்ற காட்சிகள், விவரங்கள் அல்லது கருத்துக்கள் ஆகியவை, 181 மகளிர் உதவி எண்ணுக்கு அழைப்பவர்களுடைய அனுபவங்களின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளாகும், மற்றும் எந்தவொரு குறிப்பிட்ட அழைப்பாளரையும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. 181 மகளிர் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் தனியுரிமையையும் இந்த உதவி எண் மதிக்கிறது, அடையாளச்சான்றுகள் எதுவும் கேட்பதில்லை.

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.