சச்சரவுகளால் பாதிக்கப்பட்டு, ஆதரவையும், விவரங்களையும் எதிர்நோக்குகின்ற பெண்களுக்கு இலவச-24- மணி-நேர தொலைபேசி சேவையை அளித்திட.

Leave a comment

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.