மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

ஆரோக்கியமான உறவுகளைப் புரிந்து கொள்வது, வன்கொடுமை செய்யப்படுவதை உணர்ந்து கொள்ள உதவுகிறது

அனைத்து உறவுகளும் வேறுபட்ட வகையில் இருக்கும் வேளையில், தவறாக நடத்தப்படுகின்ற ஒரு உறவையும், ஆரோக்கியமான ஒன்றையும் வேறுபடுத்திக் காட்டுகின்ற சில முக்கியமான பண்புகள் உள்ளன. ஆரோக்கியமான உறவுகள், நேர்மை, மரியாதை, நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படுகின்றன.

உங்கள் உறவு நிலையைப் புரிந்துகொள்ள இந்த உறவுநிலை அலைவரிசை உதவியாக இருக்கும்..

Health Table

ஆரோக்கியமானது

ஆரோக்கியமான உறவுநிலை என்பது நீங்கள் மற்றும் உங்கள் துணை இருவரும் பின்வருமாறு இருப்பதைக் குறிக்கிறது:

* பழகுவதற்கு எளிதானவராக இருத்தல். ஒருவருக்கொருவர் கவனத்துடனும், மரியாதையுடனும் காது கொடுத்துக் கேட்பவராக இருத்தல். ‘சம்மதிக்காமல் இருக்க சம்மதிக்கின்ற’ உரிமை உங்களுக்கு உண்டு என்பதை ஒருவருக்கொருவர் ஒப்புக் கொண்டு, உங்கள் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுதல்.

* மதிப்பளித்தல். ஒருவர் மற்றவரின் வேறுபாடுகளை மதித்து, நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கான சுதந்திரத்தை ஒருவருக்கொருவர் கொடுத்தல். மதிப்பீடு செய்தல் இல்லாமல் ஒருவர் மற்றவரின் தேவைகள், கருத்துக்கள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்.

* நம்பிக்கை வைத்தல். நீங்கள் ஒருவரையொருவர் நம்புகிறீர்கள், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக உணர்வதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைப்பது எளிதானதாக உள்ளது.

* நேர்மை. ஒருவருக்கொருவர் உங்களுடைய இயல்பான தன்மையில் இருப்பதற்குப் போதுமான அளவு பாதுகாப்பையும், சில விஷயங்களை அந்தரங்கமாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

* சமத்துவம். உங்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களும், ஆர்வங்களும் சமமான அளவு முக்கியத்துவம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. விஷயங்களிலும், முடிவுகள் எடுப்பதிலும் இருவருக்கும் சமமான கருத்துக் கூறும் உரிமை உள்ளது.

* எல்லைகளை வரையறுத்தல். ஒருவருக்கொருவர் மற்றவரின் நேரம் மற்றும் இடைவெளிக்கான தேவையை மதிக்கிறீர்கள். உங்களுக்கு சௌகரியமாக இருக்கின்ற மற்றும் இல்லாத விஷயங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள முடிகிறது.

* சம்மதத்தை நடைமுறைப்படுத்தல். பாலியல் மற்றும் குழந்தைப்பேறு விருப்பங்கள் பற்றி நீங்கள் விவாதிக்கிறீர்கள். வெளிப்படையாக ‘வேண்டாம்’ என்று சொல்ல முடிகிறது, மேலும் அதற்காக மதிக்கப்படுகிறீர்கள்.

ஆரோக்கியமற்றது

* பழகுவதற்குக் கடினமானவராக இருத்தல். முரண்பாடுகள் அல்லது பிரச்சினைகள் எழும் போது, மரியாதையுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, சண்டையிட ஆரம்பிக்கிறீர்கள்.

* அவமரியாதை செய்தல். நீங்களோ அல்லது உங்கள் துணையோ, ஒருவர் மற்றொருவரின் உணர்வுகள், தேவைகள், விருப்பங்கள் அல்லது இலக்குகளைப் பற்றிக் கவலையின்றி, ஒருவருக்கொருவர் உணர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கிறீர்கள்.

* நம்பிக்கையின்மை. உங்களில் யாரேனும் ஒருவர் ஒருவருக்கொருவர் நம்பாத போது அல்லது செயல்களையோ, நடத்தையையோ கேள்வி கேட்கத் தொடங்கும்போது.

* நேர்மையின்மை. துணைகளுக்கிடையே யாரேனும் ஒருவர் பொய் சொல்லுதல், குற்றம் சுமத்துதல் அல்லது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் போது.

* கட்டுப்படுத்துதல். நீங்களோ அல்லது உங்கள் துணையோ அடுத்த நபருக்காக முடிவெடுக்கத் தொடங்குதல், அடுத்தவரின் தேவைகள் அல்லது விருப்பங்களை விட உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்.

* தனிமைப்படுத்துதல். குடும்பத்தினர், நண்பர்கள், அல்லது மற்ற நபர்களுடன், நேரிலோ அல்லது ஆன்லைனிலோ தொடர்பு கொள்ள விடாமல் தடுத்தல்.

* பாலுறவில் ஈடுபடக் கோருதல் (சம்மதம் இல்லாமல்). பாலுறவு கொள்ளவோ அல்லது ஒரு நபர் அசௌகரியமாக உணர்கின்ற பாலியல் செயலில் ஈடுபடவோ, அழுத்தம் கொடுப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.

தவறாக நடத்துதல்

உங்கள் வாழ்க்கைத்துணை பின்வருமாறு இருக்கும் போது, அது தவறாக நடத்தப்படுகின்ற உறவாகிறது:

* புண்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்ளுதல். உங்கள் வாழ்க்கைத்துணை உடல்ரீதியாகத் துன்புறுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற, அவமதிக்கின்ற அல்லது இழிவாகப் பேசுகின்றவராக இருக்கின்றார்

* அவமரியாதை செய்தல். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், முடிவுகள், கருத்துக்கள், அல்லது பாதுகாப்பை மதிக்காமல் இருக்கிறார்.

* அவநம்பிக்கை. உங்கள் வாழ்க்கைத்துணை நீங்கள் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டுகிறார், சந்தேகப்படுபவராக இருக்கிறார், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை சரிபார்ப்பதற்காக உங்கள் கடவுச்சொற்களைத் தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார்.

* கட்டுப்படுத்துதல். பெரிய முடிவுகள் உங்களுடன் ஆலோசிக்காமலே எடுக்கப்படுகின்றன, கூட்டு வருமான ஆதாரங்கள் மீதும், அவை எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதன் மீதும் அதீத கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை எப்போது, எங்கே மற்றும் எவ்வளவு கால இடைவெளியில் நீங்கள் சந்திக்கலாம் என்பதை முடிவு செய்கிறார்

* பாலியல்ரீதியான செயலுக்குக் கட்டாயப்படுத்துகிறார் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். உங்களுக்குப் பிடிக்காத பாலியல்ரீதியான செயல்பாட்டை செய்யுமாறு உங்கள் வாழ்க்கைத்துணை கட்டாயப்படுத்துகிறார் அல்லது அழுத்தம் கொடுக்கிறார். குடும்பக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த வலியுறுத்துவதன் மூலம் உங்கள் குழந்தை பெறுகின்ற விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார், அல்லது உங்கள் விருப்பத்துக்கு மாறாக கருக்கலைப்போ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளவோ செய்கிறார்.

* குழந்தைகளைத் தவறாகக் கையாள இயன்றால், குழந்தைகளைப் பயன்படுத்துகிறார். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை உணர்ச்சிபூர்வமாகத் தவறான முறையில் கையாண்டு, உங்களுக்குப் பிடிக்காத முடிவுகளுக்கு உங்களைக் கட்டாயப்படுத்த உங்கள் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார். அக்கறையற்ற அல்லது தகுதியற்ற பெற்றோராக உங்களைக் காட்டி, குழந்தைகள் முன்பாக வேண்டுமென்றே உங்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம், உங்களுக்கு எதிராக அவர்களைத் திருப்ப முயற்சிக்கலாம்.

உறவுநிலைகளில் வன்கொடுமை செய்யப்படுவதை உணர்ந்து கொள்ளுதல்

தவறாக நடத்துகின்ற நடத்தை என்பது, பயம், அவமானம், உணர்வுப்பூர்வ அச்சுறுத்தல், வார்த்தைகள் மூலம் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றின் வழியாக, மற்றொரு நபரின் மீது அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் செலுத்துவதாகும். வாழ்க்கைத் துணை வன்முறை அல்லது குடும்ப வன்முறை எனவும் அழைக்கப்படுகின்ற வீட்டு வன்முறை என்பது, ஒரு அந்தரங்கமான உறவில் ஒரு வாழ்க்கைத் துணை மீதான அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் செலுத்துவதற்காக மற்றொரு வாழ்க்கைத் துணை பயன்படுத்துகின்ற நடத்தைகளின் வடிவமாகும். இங்கே கிளிக் செய்யவும்

தவறாக நடத்தப்படுவதற்கான பொதுவான அறிகுறிகளில் அடங்கக் கூடியவை:

* குடும்பத்தினர்/நண்பர்கள் முன்னிலையில் உங்களைக் கேலி செய்தல் அல்லது அவமானப்படுத்துதல்.

* உங்கள் குடும்பத்தினருடன்/நண்பர்களுடன் நீங்கள் நேரம் செலவிடும் போது, உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குதல்.

* உங்கள் நிதிகளைக் கட்டுப்படுத்துதல்/உங்கள் விருப்பப்படி உங்கள் பணத்தை செலவிட அனுமதிக்காமல் இருத்தல்.

* வேலை, கல்வி போன்றவை குறித்த உங்கள் விருப்பங்களைக் கட்டுப்படுத்துதல்.

* பாலியல் உறவில் ஈடுபட, அல்லது உங்களுக்குப் பிடிக்காத செயல்களை செய்ய உங்களைக் கட்டாயப்படுத்துதல்.

* உங்கள் குழந்தை வளர்ப்பில் குறை கண்டுபிடித்தல், அல்லது குழந்தைகளுக்கோ அல்லது செல்லப்பிராணிகளுக்கோ தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துதல்.

* உங்கள் உடமைகளை அழித்தல்.

* உங்களை இழிவுபடுத்துதல் அல்லது திறமையற்றவராக உணர வைத்தல்.

* மது அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துதல்.

* உங்கள் கடவுச்சொற்களைக் கூறுமாறு உங்களைக் கட்டாயப்படுத்துதல்.

தொடர்பில் இருங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் தொடர்பு படிவத்தின் மூலமாக எளிதாக நீங்கள் எங்களை அணுகலாம். விரைவில் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

RECOGNIZING ABUSE IS THE FIRST STEP. 181 WHL IS HERE TO SUPPORT.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.

உறவுமுறை வன்முறையால் பாதிக்கப்பட்டவராக மாறுகின்ற அபாயத்தில் இருக்கிறீர்களா?

    இத்தைகைய சூழ்நிலையில் ஒரே ஒரு இடத்தில் கூறப்படும் ‘ஆம்’ என்ற வார்த்தை கூட, உங்களுக்கு கடுமையான தீங்கு ஏற்படும் அபாயத்தை உருவாக்கி, உங்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

    தாமதிக்க வேண்டாம்.இன்றே நடவடிக்கை எடுத்து, 181 மகளிர் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது வன்கொடுமை பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.

    CONTACT US

      படிவத்தில் * என்று குறிக்கப்பட்ட அனைத்தும் தேவையானது.உங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாவிட்டால், தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.

      நீங்கள் ஆபத்தில் இருந்தால் உடனடியாக 100 ஐ அழைக்கவும்.அவசர காலத்தில் உதவியை பெற இப்படிவம் தேவையில்லை. மேலும் செயல்பாட்டை கணினி மூலம் கண்காணிக்க முடியும் என்பதால் மின்னஞ்சல் தொடர்பு பாதுகாப்பான வழியாக இருக்காது என்பதையும் நினைவில் கொள்க

      தொடர்பு முறை
      181லிருந்து அழைப்பதற்கான சரியான தேதி மற்றும் நேரம்:
      நீங்கள் இருப்பிட வரைபடம்,புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை இங்கே இணைக்கலாம்