மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

கூட்டாண்மைகள்

181 மகளிர் உதவி எண்ணின் மதிப்புமிகு கூட்டாளராக மாறுங்கள்

181 மகளிர் உதவி எண் 24/7 ஆதரவை வழங்குவதற்காக, இயன்ற வரை மாநிலம் முழுவம் உள்ள அதிகமான பெண்களை சென்றடைய நாங்கள் விரும்புகிறோம். யாரும் மவுனமாகக் கஷ்டப்படக் கூடாது. இதை எங்களால் தனியாகச் செய்ய முடியாது.

அரசு கூட்டாண்மைகள்
ஒன்றாக இணைந்து வாழ்வை மாற்றி அமைப்போம்

181 மகளிர் உதவி எண், துயரத்தில் உள்ள பெண்களுக்கு 24/7 ஆதரவை வழங்குகிறது. உங்கள் டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்த எங்களுக்கு உதவுங்கள். பதிலுக்கு இந்த உதவி எண், உங்கள் பயனர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அவசர கால ஆதரவையும், அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களையும், தங்குமிடம், பாதுகாப்பு உத்தரவுகள் போன்ற ஆதரவு சேவைகளையும் வழங்கும். இந்த உதவி எண், நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி, அருகிலுள்ள ஆலோசனை மையத்துக்கு வழிகாட்டவும் செய்கிறது.

கார்ப்பரேட் கூட்டாளர்கள்
ஒன்றாக இணைந்து வாழ்வை மாற்றி அமைப்போம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்களை, 181 பெண்கள் உதவி எண்ணுக்கான திறன் அடிப்படையிலான தன்னார்வலராக ஈடுபடுத்தலாம். பதிலுக்கு இந்த உதவி எண், உங்கள் பயனர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அவசர ஆதரவையும், அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களையும், தங்குமிடம், பாதுகாப்பு உத்தரவுகள் போன்ற ஆதரவு சேவைகளையும் வழங்கும். இந்த உதவி எண், துயரத்தில் உள்ள பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி, அருகிலுள்ள ஆலோசனை மையத்துக்கு வழிகாட்டுகிறது.

கல்விக் கூட்டாளர்கள்
ஒன்றாக இணைந்து வாழ்வை மாற்றி அமைப்போம்

சமூக ஊடக இயங்குதளங்கள் மூலமாக ஆரோக்கியமான உறவு நிலைகள், பெண்களுக்காக இருக்கின்ற ஆதரவு அமைப்புகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை 181 மகளிர் உதவி எண்,ஏற்படுத்துகிறது. ஒன்றாக இணைந்து நம்மால் மாணவர்களின் உணர்வு ரீதியான, மற்றும் உடல் ரீதியான நலன் மீது அக்கறை செலுத்த முடியும்.

 

எழுதுங்கள்: Commissionerate of Social Welfare,

No 1 Panagal Maligai Building 2nd Floor,

(Near Kalaignar Arch)

Jeenis Road,

Saidapet, Chennai – 600015.

மின்னஞ்சல்: partnership@tn181whl.org

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.