மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

எங்கள் வல்லுநருடன் நேரலை உரையாடல்

உங்களுடைய தனியுரிமையும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை.

உங்களுடைய பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியம். 181 இரகசிய ஆதரவை 24/7 மகளிர் உதவி மையம் வழங்குகிறது. உங்களுக்கு விவரங்களையும், பரிந்துரைகளையும் வழங்குகின்ற எங்களுடைய பயிற்சி பெற்ற ஆலோசகர்களுடன் நீங்கள் உரையாடலாம். இப்போது எங்களுடைய வழிகாட்டுதல் மற்றும் ஆலோசகரைக் கூட நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யவு ம், உங்களுடைய தேவைகளுக்கு விரைவாகப் பதிலை வழங்கவும் 181 மகளிர் உதவி எண் தமிழ்நாடு வழியாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமான உரையாடல் செய்யலாம்.

“தற்போது உரையாடு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

181 - மகளிர் உதவி எண்ணின் குறிக்கோள்கள்

ஒரு ஆரோக்கியமான உறவு என்ன என்பதை அறிந்து கொள்வது, சில நேரங்களில் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை அடையாளம் காணப் பயன்படுகிறது.

ஆரோக்கியமான உறவுகள் என்பவை, உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமிடையே, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குமிடையே, அல்லது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமிடையே உருவாகக் கூடியவையாகும். ஒரு ஆரோக்கியமான உறவு என்பது, அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையேயான அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் அமைகிறது.

தவறு செய்பவர்கள் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டிருந்து, அதனால் தங்களுடைய உணர்வுகளுக்கு ஈடு கொடுப்பதற்கான ஒரு வழியாக வன்கொடுமை செய்வதை பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கலாம்.

மேலும் வாசிக்க

இயக்கத்தில் இணையுங்கள்

வளரும் தலைமுறைகளுக்காக மிகவும் சமத்துவமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ளுங்கள். செயல்படுவதற்கான அழைப்புகள், உங்கள் குரல் தேவைப்படுகின்ற பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வழிகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கலாம்.

காணொளி தொகுப்பு

பெண்களை முதன்மைப்படுத்துகின்ற அரசு

இந்திய அரசானது, தமிழ்நாட்டுக்கு, பெண்களுக்கான உதவி எண்ணாக 181 ஐ ஒதுக்கியுள்ளது, இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24*7 அவசர உதவியை அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளும் (காவல் துறை, ஒன் ஸ்டாப் மையம், மருத்துவமனை போன்ற அதற்குரிய அதிகார அமைப்புடன் இணைப்பை ஏற்படுத்துதல்), மகளிர் தொடர்பான அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படுகின்றன.

இந்த மகளிர் உதவி எண், அம்மா உதவி மையத்துடன் இணைந்து செயல்படுமாறு தொடங்கப்பட்டது, 10 டிசம்பர், 2018 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.

எங்களை தொடர்பு கொள்ள

    படிவத்தில் * என்று குறிக்கப்பட்ட அனைத்தும் தேவையானது.உங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாவிட்டால், தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.

    நீங்கள் ஆபத்தில் இருந்தால் உடனடியாக 100 ஐ அழைக்கவும்.அவசர காலத்தில் உதவியை பெற இப்படிவம் தேவையில்லை. மேலும் செயல்பாட்டை கணினி மூலம் கண்காணிக்க முடியும் என்பதால் மின்னஞ்சல் தொடர்பு பாதுகாப்பான வழியாக இருக்காது என்பதையும் நினைவில் கொள்க

    தொடர்பு முறை
    181லிருந்து அழைப்பதற்கான சரியான தேதி மற்றும் நேரம்:
    நீங்கள் இருப்பிட வரைபடம்,புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை இங்கே இணைக்கலாம்