எந்த வகையான வன்முறையும் சட்ட விரோதமானது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மகளிர் மற்றும் குடும்பத்தினருக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த இந்திய சட்டங்கள், பாதுகாப்பும், ஆதரவும் அளிக்கிறது. தொடர்பான மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டங்கள்
இந்திய சட்டம்
குற்றவியல் (திருத்த) சட்டம், 2013
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காக, நீதிபதி வெர்மா கமிட்டியால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 வாயிலாக, இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, மற்றும் இந்திய சாட்சிய சட்டம், 1872 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
* ஆசிட் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், பார்வை பாலியல் துன்புறுத்தல், ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைதல் மற்றும் பின் தொடர்தல் போன்ற புதிய குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
* பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், ஆசிட் தாக்குதல்கள், வார்த்தைகள் மற்றும் முறையற்ற வகையில் தொடுதல், அநாகரிகமான சைகை செய்தல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
* பாலியல் பலாத்காரம் என்பதற்கான வரையறையில், வாய்வழி பாலுறவு, புணர்ச்சியற்ற பாலுறவும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில், ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயுதப்படையைச் சேர்ந்த உறுப்பினரால் செய்யப்படும் பாலியல் பாலத்காரமும், வகுப்புவாத அல்லது இனவாத வன்முறையின் போது அல்லது சம்மதம் தெரிவிக்க இயலாத நிலையில் உள்ள ஒரு பெண்ணின் மீது செய்யப்படும் பாலியல் பாலத்காரமும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் உணர்வற்ற நிலைக்கு செல்லும் வகையிலான பலாத்காரம் ஆகியவற்றுக்கான தண்டனைகள், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
* அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆசிட் தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதும், உடனடியாக அந்த நிகழ்வைப் பற்றி காவல் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டது.
* சுரண்டல் – உடல்ரீதியான சுரண்டல் அல்லது எந்தவொரு வடிவிலான பாலியல்ரீதியான சுரண்டல், அடிமைத்தனம், கொத்தடிமை, அல்லது கட்டாயப்படுத்தி உடலுறுப்புகளை எடுத்தல் ஆகியவற்றுக்காக குழந்தைகள் கடத்தப்படுதல் உள்ளிட்ட ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்.
வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், 2005
2005 ஆம் ஆண்டு, வீடு வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், 2005 இயற்றப்பட்டது. இந்த சட்டமானது’வீட்டு வன்முறை’யை, உடல் ரீதியான வன்முறை மட்டுமல்லாமல், கூடவே உணர்வு ரீதியாக/சொற்கள் சார்ந்த, பாலியல் ரீதியாக, மற்றும் பொருளாதார ரீதியான வன்கொடுமையையும் உள்ளடக்கியது என வரையறையளிக்கிறது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு ஆணைகள் உள்ளிட்ட சேவைகளையும், ஆதரவையும் இந்த சட்டம் வழங்குகிறது.
* கணவர் அல்லது ஆண் லிவ்-இன் துணைவர் அல்லது அவருடைய உறவினர்களால் செய்யப்படும் வீட்டு வன்முறையிலிருந்து மனைவிக்கு, அல்லது பெண் லிவ்-இன் துணைவிக்குப் பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் இந்த சட்டம் தன்னுடைய பாதுகாப்பை, சகோதரிகள், விதவைகள் அல்லது தாய்மார்கள் போன்ற வீட்டில் வசிக்கும் மற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
* ‘வீட்டு வன்முறை’ என்பதற்கான வரையறையில், எந்த வித வரதட்சணை அல்லது மற்ற சொத்துக்கள் அல்லது ஆஸ்திகளை கோருகின்ற சட்ட விரோதக் கோரிக்கைக்காக செய்யப்படுகின்ற உடல் ரீதியான, பாலியல் ரீதியான, சொற்கள் ரீதியான, உணர்வுரீதியான அல்லது பொருளாதார ரீதியான துன்புறுத்தலும், அதற்கான மிரட்டலும் இந்த வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
* ஒரு பங்கிடப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமை உள்ளது, அது பாதிக்கப்பட்ட நபருக்கும் எதிராளிக்கும் சேர்ந்து சொந்தமான வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ, அல்லது தனியே சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம், ஆனால் இது சம்பந்தமாக உரிமை, அல்லது சமபங்கு அல்லது கூட்டு குடும்பத்தின் வீடு, அதில் எதிராளி உறுப்பினராக இருக்கிறார், பாதிக்கப்பட்ட நபர் அல்லது எதிராளிக்கு ஒரு உரிமையும் இல்லாதவாறு இருக்கின்ற வீடாக இருக்க வேண்டும்.
* பகிரப்பட்ட வீட்டிலிருந்து எதிராளி வெளியேற்றப்படுவதற்கோ அல்லது மாற்று தங்குமிடத்தைப் பெறுவதற்கோ அல்லது அதற்கான வாடகை செலுத்துவதற்கோ வழி காட்டப்படும்.
* இந்த சட்டத்தின் கீழ், பாதுகாப்பு ஆணைகள், குடியிருப்பு ஆணைகள், பண நிவாரணம், காவல் ஆணைகள் மற்றும் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமையுண்டு.
* வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை நடத்துவதற்கும், நேர்மறையான அணுகுமுறையுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதற்கும், மாநில அரசால் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சட்டமானது, பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனை, சட்டரீதியான உதவியைப் பெறுதல், பாதுகாப்பான தங்குமிடம் ஆகிய விஷயங்களில் அவருக்கு உதவியளிப்பதற்காக, சேவை வழங்குநர்களாக செயல்படுவதற்கான அங்கீகாரத்தை அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வழங்குகிறது.
பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013
பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013 பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013. இந்த சட்டமானது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்து, பாதுகாப்பான மற்றும் பத்திரமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக 2013 ஆண்டு ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம், முறைசார் மற்றும் முறைசாராத் துறைகள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனம், அரசு மற்றும் பொதுத் துறைகளுக்கும் பொருந்துகிறது. இது, ஒரு பெண்ணின் வேலைவாய்ப்புகளுக்காக மறைமுகமான அல்லது வெளிப்படையான வாக்குறுதி அல்லது மிரட்டல், அல்லது அவருடைய ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பைப் பாதிக்கக் கூடிய வகையில் விரோதமான பணிச்சூழலை உருவாக்குதல் அல்லது அவமானகரமாக நடத்துதல் ஆகிய சூழ்நிலைகளையும் சேர்ந்தது என பணியிடத்தில் செய்யப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கான விரிவான வரையறையை அளிக்கிறது. இது, வயது அல்லது பதவி நிலையைப் பொருட்படுத்தாமல், அமைப்புசார் அல்லது அமைப்புசாரா துறைகளில் இருந்தாலும், அரசு அல்லது தனியார் துறையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது. வீட்டுப் பணியாளர்களும் இந்த சட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பணியிடம் என்பது, போக்குவரத்து உட்பட வேலை நேரத்தின் போது பணியாளர் செல்கின்ற எந்த ஒரு இடமும் என விரிவுபடுத்தப்படுகிறது. உள்ளார்ந்த புகார்கள் குழு (ஐ.சி.சி) மற்றும் உள்ளூர் புகார்கள் குழு (எல்.சி.சி) ஆகியவற்றின் வடிவத்தில் ஒரு நிவாரண செயல்முறையை இந்த சட்டம் வழங்குகிறது. உரிமையாளருக்கு இந்த சட்டம் பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பை வழங்குகிறது. உரிமையாளர்கள், இந்த சட்டத்தின் விதிகளைப் பற்றிப் பணியாளர்கள் அறிந்து கொள்வதற்காக, முறையான இடைவெளிகளில் ஒர்க்ஷாப்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும், மற்றும் உள்ளார்ந்த குழுவின் அரசியல் நிர்ணயம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை விவரங்கள் பற்றிய அறிவிப்புகளைக் காட்ட வேண்டும்.
SC_Judgment_dated_13.08.1997_-_Visakha__Ors._Vs._State_of_Rajasthan__Others.pdf (dtf.in)
SC_Judgment_dated_21.08.2019_-_Dr._P.S._Malik_Vs._High_Court_of_Delhi__Anr..pdf (dtf.in)
SC_Judgment_dated_24.04.2020_-_Nisha_Priya_Bhatia_Vs._Union_of_India__Anr..pdf (dtf.in)
DoPT Notification regarding Appeal process
DoPT Notification regarding completion of Inquiry within 30 days
வரதட்சணை தடை (திருத்த) சட்டம், 1984
வரதட்சணை பழக்கத்தை ஒழிப்பதற்காக 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டும் இந்த சட்டத்தின் மூலம் தடை செய்யப்படுகிறது. இந்த சட்டம் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. வரதட்சணை தடுப்பு (திருத்த) சட்டம், 1984 ஐத் தொடர்ந்து, இந்த சட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக,1986 இல் வரதட்சணை தடுப்பு (மணமகன் மற்றும் மணமகளின் பரிசுப் பொருட்களின் பட்டியலைப் பராமரித்தல்) விதிகள் உருவாக்கப்பட்டன.
* இந்த சட்டம், ஒரு திருமணத்தின் ஒரு தரப்பால் மற்றொரு தரப்புக்கு அல்லது இரண்டு தரப்பில் ஏதேனும் ஒரு தரப்பு பெற்றோருக்கு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கப்படும் அல்லது கொடுக்க ஒப்புக் கொள்ளப்படும் எந்த ஒரு சொத்து அல்லது விலையுயர்ந்த பொருட்களை ‘வரதட்சணை’ என வரையறுக்கிறது.
* வரதட்சணை கொடுப்பது அல்லது வாங்குவதற்குமான அல்லது வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவதற்கு உடந்தையாக இருப்பதற்குமான தண்டனை, 15000 ரூபாய் அல்லது அந்த வரதட்சணை மதிப்பின் தொகை, இதில் எது அதிகமோ அந்த அளவு அபாராதத்துடன், 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையாகும்.
* மணப்பெண் அல்லது மணமகனின் பெற்றோர், அல்லது பிற உறவினர்கள் அல்லது காப்பாளரிடம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்பது, 10000 ரூபாய் வரையிலான அபராதத்துடன், 2 வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும்.
* மகன் அல்லது மகள் அல்லது எந்த ஒரு உறவினரின் திருமணத்துக்காக, சொத்து அல்லது பணம் அல்லது இரண்டிலும் பங்கு தருவதாக அல்லது வியாபாரத்தில் பங்கு தருவதாக, அல்லது வேறு வகையில் தருவதாக விளம்பரத்தின் மூலமாக அளிக்கப்படும் சலுகைகள், 15000 ரூபாய் வரையிலான அபாராதத்துடன், 5 வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
* வரதட்சணை கொடுக்க மற்றும் வாங்க செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தமும் செல்லாது.
பரிசுப்பொருட்களின் பட்டியலானது, உறுதிமொழி அஃபிடவிட் வடிவத்தில், நோட்டரி சான்று பெற்று, பாதுகாப்பு அதிகாரியால் அல்லது வரதட்சணை தடுப்பு அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, இரண்டு தரப்பினரும் வைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் மணமகனும், மணமகளும் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோருக்கும் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை உட்பட, கடுமையான தண்டனை கிடைக்கும்.
மேலும் வாசிக்க…
Dowry Prohibition Rules | Ministry of Women & Child Development (wcd.nic.in)
குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006
இந்த சட்டம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தைத் திருமணமும், திருமண சமயத்தில் குழந்தையாக இருந்து, ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற தரப்பின் விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடியதாக இருக்கும். முந்தைய சட்டங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது, 1929 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக, நவம்பர் 1, 20007 இல் நடைமுறைக்கு வந்தது. 1978 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 15 இல் இருந்து 18 வயதாகவும், ஆண்களுக்கு 18 இல் இருந்து 21 வயதாகவும் உயர்த்துகின்ற திருத்தம் செய்யப்பட்டது. பெண் அல்லது பையனுக்கு சட்டப்பூர்வ வயதை விடக் குறைவாக, அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் அல்லது பையனுக்கு 21 வயதுக்குக் கீழ் உள்ள திருமணத்தை, குழந்தைத் திருமணம் என குழந்தைத் திருமண தடைச் சட்டம் வரையறுக்கிறது. இந்த சட்டத்தின் விதிகள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்கின்றன, பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்குகின்றன, மேலும் அத்தகைய திருமணத்துக்கு உடந்தையாக இருக்கின்ற, ஊக்குவிக்கின்ற அல்லது நடத்தி வைப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கின்றன. மேலும் இந்த சட்டமானது, நடவடிக்கை எடுப்பது மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, திறமையாக வழக்குத் தொடுப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கவோ அல்லது உதவி செய்யவோ அல்லது திருமண சடங்கு நடத்த அனுமதிக்கவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் அறிவுறுத்துகிறது. அவர்களின் கடமைகளில், இத்தகைய குழந்தைத் திருமணத்தின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்சினையை சமூகத்துக்கு உணர்த்துவது, அரசு வழி காட்டக் கூடிய நேரத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் புள்ளி விவரங்களை அளித்தல் ஆகியவை அடங்குகின்றன.
* திருமணம் நடைபெறும் சமயத்தில் குழந்தையாக இருந்த திருமணத்தின் ஒரு ஒப்பந்த தரப்பு மட்டுமே, ரத்து செய்கின்ற உத்தரவு மூலம் அந்த குழந்தைத் திருமணத்தை ரத்து செய்வதற்கான மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
* மனு தாக்கல் செய்யும் நேரத்தில், அந்த மனுதாரர் ஒரு மைனராக இருந்தால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியிடம் அவருடைய பாதுகாவலர் அல்லது அவருடைய பிரதிநிதியால் மனு தாக்கல் செய்யப்படலாம்.
* இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் மனுவை எந்த நேரத்திலும், ஆனால் மனுவைத் தாக்கல் செய்கின்ற குழந்தை மேஜர் ஆகி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவற்கு முன்பாகத் தாக்கல் செய்யலாம்.
* இந்தப் பிரிவின் கீழ் ஒரு ரத்து செய்யும் உத்தரவை வழங்கும் வேளையில், மாவட்ட நீதிமன்றம் மற்றொரு தரப்புக்கு, அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அடுத்த தரப்பிடம் இருந்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட பணம், விலையுர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை அல்லது அந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பிற பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்துக்கு இணையான தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு, அந்த திருமணத்தின் இரண்டு தரப்பு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆணையைப் பிறப்பிக்கும்.
* குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக உள்ள ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கடுங்காவல், அல்லது ஒரு இலட்ச ருபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
* எந்த ஒரு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்கின்ற, நடத்துகின்ற, வழிநடத்துகின்ற அல்லது உடந்தையாக இருக்கும் நபருக்கு, அந்தத் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் அல்ல என அவர் நினைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு இலட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
* குழந்தைத் திருமணத்தில் ஒரு குழந்தை ஈடுபடும் போது, அந்தத் திருமணத்தை ஊக்குவிக்கின்ற அல்லது அந்தச் சடங்கு நடைபெற அனுமதிக்கின்ற, அல்லது குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்ளுதல் அல்லது பங்கெடுத்தல் உள்ளிட்ட வேண்டுமென்றே
அதைத் தடுக்கத் தவறுகின்ற, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது வேறு ஏதேனும் நிலை, சட்டரீதியாக அல்லது சட்டத்துக்கு முரணாக, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் எவரேனும் அல்லது நபர்களின் சங்கம் உள்ளிட்ட குழந்தை மீது அதிகாரம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனையும், மேலும் ஒரு இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.