மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

இயக்கத்தில் இணையுங்கள்

நாம் ஒன்றாக இணைந்து மக்களுக்கு ஆதரவளிக்கலாம். விருப்பமுள்ள தன்னார்வலர்களாக கலந்து கொள்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்க்கையில் உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

 

181 மகளிர் உதவி எண் உடன் தன்னார்வலர்

181 மகளிர் உதவி எண் சேவையில் தன்னார்வமாக ஈடுபடுவது மூலம் அழைப்பாளர்களுக்கு ஆதரவளியுங்கள். மாநிலம் முழுவதும் உள்ள தப்பிப் பிழைத்தவர்களுக்கு, நுணுக்கமான மற்றும் இரகசியமான நெருக்கடி நேர ஆதரவை வழங்குவதற்காக நாங்கள் உங்களுக்குப் பயிற்சியளிப்போம்.

உங்கள் பயிற்சியில் அடங்கியவை:

* 10 மணி நேரத்துக்கு 181 மகளிர் உதவி எண் தன்னார்வலர் ஆன்லைன் பயிற்சி பெறுதல்.

* மூன்று நேரலை கற்றல் அமர்வுகளில் கலந்து கொள்ளுதல் மற்றும் பங்கெடுத்தல்.

* 181 மகளிர் உதவி எண் தன்னார்வ ஆலோசகராகப் பதிவு செய்வதற்கான ஒரு-மணி நேர கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்

ஒரு பயிற்சி பெற்ற தன்னார்வ ஆலோசகராக, நீங்கள்:

* 181 மகளிர் உதவி எண் தொடர்பு மையத்தில் பணிபுரிவீர்கள்

* அழைப்பவர்களுக்கு திட்டங்கள் அல்லது சேவைகள் பற்றிய விவரங்களை வழங்குவீர்கள்.

 

181 மகளிர் உதவி எண் பிராண்டு தூதுவர்

181 மகளிர் உதவி எண் மகளிர் உதவி எண்ணுக்குத் தன்னார்வலராகப் பணியாற்றி அழைப்பாளர்களுக்கு ஆதரவளியுங்கள். மாநிலம் முழுவதும் உள்ள தப்பிப் பிழைத்தவர்களுக்கு நுணுக்கமான மற்றும் இரகசியமான நெருக்கடி நேர ஆதரவை வழங்குவதற்கு உங்களுக்கு நாங்கள் பயிற்சியளிப்போம்:

உங்கள் பயிற்சியில் அடங்கியவை:

* 10 மணி நேரத்துக்கு 181 மகளிர் உதவி எண் தன்னார்வலர் ஆன்லைன் பயிற்சி பெறுதல்.
* மூன்று நேரலை கற்றல் அமர்வுகளில் கலந்து கொள்ளுதல் மற்றும் பங்கெடுத்தல்.
* 181 மகளிர் உதவி எண் தன்னார்வ ஆலோசகராகப் பதிவு செய்வதற்கான ஒரு-மணி நேர கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்.

ஒரு பயிற்சி பெற்ற தன்னார்வ ஆலோசகராக, நீங்கள்:

* 181 டபிள்யூ.எச்.எல் தொடர்பு மையத்தில் பணிபுரிவீர்கள்
* அழைப்பவர்களுக்கு திட்டங்கள் அல்லது சேவைகள் பற்றிய விவரங்களை வழங்குவீர்கள்.

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,
எண் 1, பனகல் மாளிகைக் கட்டிடம்
2வது தளம், கலைஞர் தோரணவாயிலுக்கு அருகில்,
ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை,
சென்னை, தமிழ்நாடு 600015

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் முன்னெடுப்பான‘நிர்பயா திட்டம்’ மற்றும் சென்னை பாதுகாப்பான நகரத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை நீதிபதி வர்மா குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிர்பயா நிதியின் கீழ், பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகியவையாகும்.

CONTACT US

    படிவத்தில் * என்று குறிக்கப்பட்ட அனைத்தும் தேவையானது.உங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாவிட்டால், தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.

    நீங்கள் ஆபத்தில் இருந்தால் உடனடியாக 100 ஐ அழைக்கவும்.அவசர காலத்தில் உதவியை பெற இப்படிவம் தேவையில்லை. மேலும் செயல்பாட்டை கணினி மூலம் கண்காணிக்க முடியும் என்பதால் மின்னஞ்சல் தொடர்பு பாதுகாப்பான வழியாக இருக்காது என்பதையும் நினைவில் கொள்க

    தொடர்பு முறை
    181லிருந்து அழைப்பதற்கான சரியான தேதி மற்றும் நேரம்:
    நீங்கள் இருப்பிட வரைபடம்,புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை இங்கே இணைக்கலாம்