எங்கள் வல்லுநருடன் நேரலை உரையாடல்
உங்களுடைய தனியுரிமையும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை.
“தற்போது உரையாடு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.
181 - மகளிர் உதவி எண்ணின் குறிக்கோள்கள்
ஒரு ஆரோக்கியமான உறவு என்ன என்பதை அறிந்து கொள்வது, சில நேரங்களில் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை அடையாளம் காணப் பயன்படுகிறது.
ஆரோக்கியமான உறவுகள் என்பவை, உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமிடையே, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குமிடையே, அல்லது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமிடையே உருவாகக் கூடியவையாகும். ஒரு ஆரோக்கியமான உறவு என்பது, அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையேயான அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் அமைகிறது.
தவறு செய்பவர்கள் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டிருந்து, அதனால் தங்களுடைய உணர்வுகளுக்கு ஈடு கொடுப்பதற்கான ஒரு வழியாக வன்கொடுமை செய்வதை பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கலாம்.
இயக்கத்தில் இணையுங்கள்
வளரும் தலைமுறைகளுக்காக மிகவும் சமத்துவமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ளுங்கள். செயல்படுவதற்கான அழைப்புகள், உங்கள் குரல் தேவைப்படுகின்ற பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வழிகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கலாம்.
பெண்களை முதன்மைப்படுத்துகின்ற அரசு
இந்திய அரசானது, தமிழ்நாட்டுக்கு, பெண்களுக்கான உதவி எண்ணாக 181 ஐ ஒதுக்கியுள்ளது, இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24*7 அவசர உதவியை அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளும் (காவல் துறை, ஒன் ஸ்டாப் மையம், மருத்துவமனை போன்ற அதற்குரிய அதிகார அமைப்புடன் இணைப்பை ஏற்படுத்துதல்), மகளிர் தொடர்பான அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படுகின்றன.
இந்த மகளிர் உதவி எண், அம்மா உதவி மையத்துடன் இணைந்து செயல்படுமாறு தொடங்கப்பட்டது, 10 டிசம்பர், 2018 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.